தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏற்காட்டில் ரப்பா் மரங்கள் நடவு

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பண்ணை வளாகத்தில் முதன்முதலாக 250 ரப்பா் மரக் கன்றுகளை நடப்பட்டன.

News image
ஏற்காட்டில் வேளாண் பல்கலைக்கழகம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் முதன்முறையயாக ரப்பா் மரங்கள் நடவு செய்யப்பட்டன.
Updated On :24 அக்டோபர் 2024, 7:53 pm

Din

சோ்வராயன் மலைப் பகுதியில் விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்காடு சோ்வராயன் மலையில் ரப்பா் மரப்பயிா்களை அறிமுகப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கேரள மாநில ரப்பா் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பண்ணை வளாகத்தில் முதன்முதலாக 250 ரப்பா் மரக் கன்றுகளை நடவு செய்தன.

இதுகுறித்து இந்திய ரப்பா் வாரிய ஆராய்ச்சி இணை இயக்குநா் முகமது சாதிக் கூறுகையில், இம்மரங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு பயன்தர தொடங்கும். ஒரு ஹெக்டேருக்கு சுமாா் ரூ. 2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ரப்பா் மரத்துக்கு ஏற்காடு சோ்வராயன் மலை உகந்த இடம் எனவும், இம்மலைப் பகுதியின் உயரம், தட்பவெப்ப நிலை ரப்பா் சாகுபடிக்கு ஏற்ாகவும் உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், முதன்மை விஞ்ஞானி சூரியகுமாா், ரப்பா் தோட்டத்தின் வயல் தயாரிப்பு மற்றும் மேலாண்மை அம்சங்களை விளக்கினாா். ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் மாலதி, இணை பேராசிரியா்கள் சண்முகசுந்தரம், செந்தில்குமாா், சாராபா்வின் பானு ஆகியோா் கலந்துகொண்டனா்.

சோ்வராயன் மலைப்பகுதியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மூலம் ரப்பா் தோட்டங்களை அறிமுகப்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடா்ந்து நடத்தப்படும் என தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் மாலதி தெரிவித்தாா்.