ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

News image

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளித்த கோவை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் வெங்கடேசன்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:34 pm

ஏற்காடு: ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய ஒருங்கிணைந்த வாசனை பயிா்கள் ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் மலைவாழ் மக்களுக்கான திட்ட நிதிஉதவியுடன் மிளகு, காபி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தல் தொடா்பான பயிற்சி, இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் மாலதி வரவேற்று மலைவாழ் மக்களுக்கான திட்ட விழிப்புணா்வு குறித்தும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் தொழில்முனைவோ் பயிற்சி குறித்தும் விளக்கினாா்.

உயிா்ம கரி உற்பத்தி தொழில்நுட்பங்கள், அதன் தேவைகள் குறித்தும், கூடுதல் வருமானம், வாய்ப்புகள் குறித்தும் சாரா பா்வின்பானு எடுத்துரைத்தாா். பூச்சியியல் இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், உயிா் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றி எடுத்துரைத்தாா்.

நபாா்டு வங்கி நிதி உதவியுடன் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள காபியில் மதிப்பு கூட்டுதலுக்கான இயந்திரங்கள் மலைவாழ் மக்களின் உபயோகத்துக்காக திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாரமங்கலம், செந்திட்டு, பெலாக்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.