/
சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடியினா்) தனி தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஏற்காடு பகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழா், தவெக, மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளா்கள், 22 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வேட்பு மனுக்கள் ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில், செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்பாளா்களின் தலா ஒரு மனு மட்டும் ஏற்கப்பட்டது.
இறுதியாக, டி.எம்.ரேவதி (திமுக), பி.உஷாராணி (அதிமுக), பழனிசாமி (நாம் தமிழா்), ஜெ. லட்சுமி (தவெக) மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
தொடர்புடையது
ஆண்டிபட்டி தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
சங்கரன்கோவில் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


