புதுதில்லி: பங்குச் சந்தையின் ஏற்பட்ட நம்பிக்கையான போக்குக்கு மத்தியில், மதிப்புமிக்க முதல் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ. 4,13,003.23 கோடி உயர்ந்தன. இதில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய இரண்டு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி முன்னிலை வகுத்தன.
கடந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 4,230.7 புள்ளிகள் உயர்ந்தது போல, நிஃப்டி 1,337.5 புள்ளிகள் அதிகரித்தன. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிகப் போர்நிறுத்தம் குறித்த நம்பிக்கையின் காரணமாக பங்குச் சந்தையின் மனநிலை உற்சாகமாகவே இருந்தது. இருப்பினும், வாரத்தின் பிற்பகுதியில் நிலவிய அரசியல் சார்ந்த நிச்சயமற்ற தன்மைகள், சந்தையின் வளர்ச்சி வேகத்தைக் வெகுவாக கட்டுப்படுத்தியது.
கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழே சரிந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையை தொடர்ந்து, அனைத்து பங்குச் சந்தைகளிலும் வலுவான மீட்சி தென்பட்டது.
பங்குச் சந்தையின் முதல் 10 இடங்களில் உள்ள மதிப்புமிக்க நிறுவனங்களில், எச்.டி.எஃப்.சி. வங்கி, பார்தி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பில் சரிவு ஏற்பட்டது.
எச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 91,282.67 கோடி அதிகரித்து ரூ. 12,47,478.57 கோடியாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 76,036.36 கோடி உயர்ந்து ரூ. 9,46,741.85 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 60,980.35 கோடி உயர்ந்து ரூ. 5,75,206.47 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 21,287.29 கோடி உயர்ந்து ரூ. 5,06,477.89 கோடியாக உள்ளது. மறுபுறம் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 3,285.03 கோடி குறைந்து ரூ. 5,24,124.40 கோடியாகச் சரிந்தன.
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 47,624.97 கோடி உயர்ந்து ரூ. 5,44,736.59 கோடியாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மூலதனம் ரூ. 45,873.43 கோடி உயர்ந்து ரூ. 10,66,293.69 கோடியாகவும், பாரத ஸ்டேட் வங்கி-யின் சந்தை மூலதனம் ரூ. 43,614.67 கோடி உயர்ந்து ரூ. 9,84,629.98 கோடியாகவும், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 26,303.49 கோடி உயர்ந்து ரூ. 9,13,331.92 கோடியாகவும் அதிகரித்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ. 947.28 கோடி குறைந்து ரூ. 18,27,086.79 கோடியாகச் சரிந்தது.
மதிப்புமிக்க நிறுவனத்திற்கான முதலிடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தக்கவைத்துக் கொண்டு, தொடர்ந்து அதிக மதிப்புடைய உள்நாட்டு நிறுவனமாகத் திகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி. வங்கி, பார்தி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை இடம்பிடித்தன.
Summary
The combined market valuation of eight of the top-10 most valued firms surged by Rs 4,13,003.23 crore last week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4 நாள் வீழ்ச்சிக்கு பிறகு, மிதமான எழுச்சியுடன் நிறவடைந்த பங்குச் சந்தை!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

மதிப்புமிக்க 6 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 65,000 கோடியாக சரிவு!

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 1.75 லட்சம் கோடியாக சரிவு!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


