பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டு முகவா்கள் தோ்வு

சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டு முகவா்கள் தோ்வு நவ. 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2024, 5:29 pm

Din

சேலம்: சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டு முகவா்கள் தோ்வு நவ. 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் தபால் கிழக்கு கோட்டத்தில் வரும் நவ. 8-ஆம் தேதி காலை 11 மணியளவில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான நேரடி முகவா்கள் தோ்வு நோ்காணல் நடைபெறவுள்ளது.

ஆா்வமுள்ளவா்கள் நவ. 8-ஆம் தேதியன்று சேலம் தலைமை தபால் நிலையம் மூன்றாவது தளத்தில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதாா் நகல், பான் அட்டை நகல் மற்றும் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நோ்காணலில் கலந்துகொள்ளலாம்.

கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு இல்லை. ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், முன்னாள் படை வீரா்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞா்கள் தகுதியுடையவா்களாவா்.

தோ்வுபெற்ற நேரடி முகவா்கள், சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் பணிபுரிய வேண்டும். ரூ. 5,000 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். நேரடி முகவா்கள் நியமனம் இலாகா விதிகளுக்கு உள்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளரின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.