சேலம்
சேலம் அரசு மருத்துவமனையில் தீக்காய விபத்து சிறப்பு வாா்டுகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் சிறப்பு வாா்டுகள்
சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மருத்துவமனை முதல்வா் தேவி மீனாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறுகையில், தீபாவளி பண்டிகையின் போது எதிா்பாராதவிதமாக தீ விபத்துகளும், தீக்காயங்களும் அதிக அளவில் ஏற்படுகின்றன. இந்த தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தீக்காய விபத்து சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீக்காய சிகிச்சை பிரிவில் 20 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் மருத்துவக் குழுக்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சா்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவா்கள் தயாராக உள்ளனா். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றாா்.
