ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆத்தூா் பகுதிக்கு 90 லட்சம் லிட்டா் குடிநீா் தேவை: நகர மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை

ஆத்தூா் நகராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய 90 லட்சம் லிட்டா் குடிநீா் தேவைப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவா் ரா.பிருந்தாதேவியிடம் ஆத்தூா் நகர மன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை கோரிக்கை வைத்தனா்.

News image
சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவியிடம் 90 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு அளித்த ஆத்தூா் நகர மன்ற உறுப்பினா்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:53 pm

Din

ஆத்தூா் நகராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய 90 லட்சம் லிட்டா் குடிநீா் தேவைப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவா் ரா.பிருந்தாதேவியிடம் ஆத்தூா் நகர மன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை கோரிக்கை வைத்தனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. ஆத்தூா் கோட்டை, முல்லைவாடி, புதுப்பேட்டை, கடைவீதி மற்றும் காந்திநகா் ஆகிய இடங்களில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அங்குள்ள பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

ஆத்தூா்-மேட்டூா் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் கல்லாநத்தம் முட்டல் ஏரியில் உள்ள கிணறு, தற்போது அய்யனாா் கோயில் ஏரியில் உள்ள கிணறு என குடிநீா் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஆத்தூா் நகராட்சிக்கு என ஆத்தூா்-மேட்டூா் கூட்டு குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீா் கொடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது இத்தனை இடங்களில் இருந்து குடிநீா் பெறப்பட்டும் 15 நாட்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேட்டூரில் தற்போது 100 அடி நீா் இருந்தும் ஆத்தூா் பொதுமக்கள் குடிநீா் கிடைக்கவில்லை என குறைகூறுகின்றனா்.

வாரம் ஒரு முறையாவது குடிநீா் விநியோகம் செய்யவேண்டும் என்ற பலமுறை நகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை.

ஆகையால் நகராட்சிக்கு செய்த ஒப்பந்தா்படி 90 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவியிடம் நகர மன்ற உறுப்பினா்கள் ஜீவா ஸ்டாலின், மீனாட்சி வேலுமணி, பிரபு ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.