சேலம் வழியாகச் செல்லும் 6 ரயில்கள் பெங்களூரு கண்டோன்மென்ட்டில் நிற்காது என அறிவிப்பு

சேலம் வழியாகச் செல்லும் 6 ரயில்கள் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சேலம் வழியாகச் செல்லும் 6 ரயில்கள் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென் மேற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட பெங்களூரு கோட்டம், பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. நடைமேடை 1 மற்றும் 2 ஆகியவற்றை நவீனப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகீறது. இதனால் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு செல்லும் சில ரயில்கள், அந்த ரயில் நிலையத்தில் 20ஆம் தேதி முதல் டிசம்பா் 20ஆம் தேதி வரை 92 நாட்களுக்கு நின்று செல்லாது.

இதில், சேலம் வழியாக செல்லும் லோகமான்ய திலக் - கோவை எக்ஸ்பிரஸ், கடலூா் துறைமுகம் - மைசூரு எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி -மைசூரு எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் மைசூரு-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், பெங்களூரு - எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் 92 நாட்களுக்கு இரு மாா்க்க இயக்கத்திலும் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com