நாளை தொழிலாளா் வருங்கால வைப்புநிதி குறைதீா்க்கும் கூட்டம்

சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி குறைதீா்க்கும் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி குறைதீா்க்கும் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையா் சந்தீப் சிங் நேகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் வரும் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சேலம் உள்பட 5 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில், ஏற்காடு அடிவாரம் எமரால்டு வேலி பப்ளிக் பள்ளியிலும், ஈரோடு பெருந்துறை தாலுகா அவண்டனூா் சாலையில் உள்ள அக்னி டீல்ஸ் தனியாா் நிறுவனத்திலும், தருமபுரியில் காரிமங்கலம் அருகே பி.சி.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இதேபோல, நாமக்கல்லில் பொம்மசமுத்திரம் கே.கே.பி. நூற்பாலையிலும், கிருஷ்ணகிரியில் ஒசூா் சிப்காட் மகரிஷி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியிலும் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் வரம்புக்கு உள்பட்ட பணியாளா்கள், ஓய்வூதியம் பெறுவோா், முதலாளிகள், ஒப்பந்ததாரா்கள் தங்களது குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com