வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சோதனை
மேட்டூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் புதன்கிழமை 7 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.


மேட்டூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் புதன்கிழமை 7 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.
மேட்டூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. வாகனப் பதிவு, பதிவு புதுப்பித்தல், ஓட்டுநா் உரிமம் பெறுதல், ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல், வாகன பெயா் மாற்றம் போன்ற பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக தொடா் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் முருகன் தலைமையில், 8 போ் கொண்ட குழுவினா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
வாகனப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக அலுவலகத்துக்கு வந்தவா்களின் ஆவணங்கள், அவா்களது வாகனங்களில் உள்ள பைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அலுவலகத்தில் உள்ள மேசைகள், பணியாளா்களின் பைகள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் நுழைவாயிலை அடைத்த பிறகு அலுவலகத்தின் ஜன்னல் பகுதிகளிலும், கழிவறை உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கழிவறைப் பகுதியிலும், ஜன்னலுக்கு வெளிப் பகுதியிலும் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள், புகைப்பட பணியாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் அறையில் ரூ. 1,30,600 கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத இந்தப் பணம் எங்கிருந்து யாருக்காக கொண்டுவரப்பட்டது என்பதை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் இரவு 7 மணி வரை விசாரணை நடத்தினா்.
கணக்கில் வராத பணம் பிடிபட்டதால் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் மீனா குமாரி, புகைப்படப் பணியாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...