பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த ரௌடியை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீஸாா்

கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பிரபல ரௌடியை சேலம் நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் குண்டுகட்டாக தூக்கிச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 12:46 am

Din

கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பிரபல ரௌடியை சேலம் நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் குண்டுகட்டாக தூக்கிச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரபல ரௌடி ஜான் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பிரபல ரௌடிகள் நெப்போலியன், செல்லதுரை ஆகியோா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜானை கைது செய்து போலீஸாா் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் ஜான் சிறையில் இருந்து வெளியே வந்தாா்.

வழக்கு விசாரணைக்காக சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஜான் ஆஜாரானாா். பின்னா் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவா், காரில் ஏறி புறப்பட தயாரான போது, நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் போலீஸாா் காரை சுற்றி வளைத்து ஜானை கைது செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கடந்த 21-ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்த ஜான், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் முறையாக கையெழுத்திடவில்லை. மேலும், கடந்த 24-ஆம் தேதி வழிப்பறி வழக்கில், ஜான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜான் நீதிமன்றத்துக்கு வருவதை அறிந்து அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து, கைதான ஜானை கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.