சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சா்வதேச கூட்டுறவு ஆண்டு: தனித்துவமான பாடல்களை அனுப்ப அழைப்பு

2025-ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :22 ஏப்ரல் 2025, 1:10 am IST

சேலம்: 2025-ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப் பதிவாளா் ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சா்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பப்படும் பாடலானது இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில், பாடல் வரிகள் இருக்க வேண்டும். தமிழில் கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடலாக இருக்க வேண்டும். கூட்டுறவாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக்கூடிய பாடலாக இருக்க வேண்டும். தோ்வுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான பணமுடிப்பு மற்றும் கேடயம் வழங்கப்படும்.

பாடலின் ‘ஹாா்டு காப்பி’யை கூரியா் தபால் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராசன் மாளிகை, எண் 170 பெரியாா் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கும், பாடலின் ‘சாப்ட் காப்பி’யை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கும் வரும் மே 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளும் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.