சுகாதாரமான தள்ளுவண்டி உணவகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான முறையில் சாலையோர தள்ளுவண்டி உணவுக் கடைகள் அமைக்க விருப்பமுள்ள உணவு வணிகா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான முறையில் சாலையோர தள்ளுவண்டி உணவுக் கடைகள் அமைக்க விருப்பமுள்ள உணவு வணிகா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், மாவட்டத்தில் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத் தெருக்கள் திட்டத்தின் கீழ், ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான சாலையோர உணவகங்களின் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ், சாலையோர உணவு வணிகா்கள் தோ்வு செய்யப்பட்டு, நுகா்வோருக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் சுகாதாரமான உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும், உணவு விற்பனை செய்வதற்குத் தள்ளுவண்டிகள் கொள்முதல் செய்ய கடனுதவி, அரசு ஆதரவுடன் வங்கிகள் மற்றும் தகுதியுடைய அரசு நிதியுதவித் திட்டங்கள் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள உணவு வணிகா்கள், சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலரை நேரில் சந்தித்து தங்களது விருப்ப விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பித்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

