
ஜெருசலேம் புனிதப் பயணம் செல்லும் கிறிஸ்தவா்களுக்கு மானியம்: ஆட்சியா்
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவப் பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவப் பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறிஸ்தவா்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ. 37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருள்சகோதரிகளுக்கு நபா் ஒருவருக்கு ரூ. 60,000 வீதமும் ஈசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ், நிகழாண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸதவப் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், சிறுபான்மையினா் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றிப் பெறலாம். மேலும் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 31.1.2027-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






