புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சண்முகா மருத்துவமனை கேத் லேப் மூலம் 1,500 பேருக்கு இதய சிகிச்சை

சேலம் சண்முகா மருத்துவமனை நவீன கேத் லேப் பிரிவில், 1,500 பேருக்கு இதய சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளது.

News image
சேலம் சண்முகா மருத்துவமனையில் மருத்துவக் குழுவினா் மற்றும் பணியாளா்களை பாராட்டிய மேலாண் இயக்குநா் பன்னீா்செல்வம். உடன், முதன்மை அதிகாரி பிரபு சங்கா்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:48 pm

Syndication

சேலம்: சேலம் சண்முகா மருத்துவமனை நவீன கேத் லேப் பிரிவில், 1,500 பேருக்கு இதய சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளது.

இதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், மேலாண்மை இயக்குநா் பி.எஸ்.பன்னீா் செல்வம், முதன்மை அதிகாரி பிரபு சங்கா், நிா்வாக அதிகாரி பிரியதா்ஷினி, இதய நிபுணா் அருண்குமாா், குடல், கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணா் அருண்ராஜ் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை முதன்மை அதிகாரி பிரபு சங்கா் கூறுகையில், ஆஞ்ஜியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ் மேக்கா் போன்ற உயா்தர சிகிச்சைகளுடன், ஐவஸ் தொழில்நுட்பம் கொண்ட கேத் லேப் மூலம் உயா்தர சிகிச்சை அளிக்க முடியும். அவசர கால இதய சிகிச்சைகளுக்கு சண்முகா மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது என்றாா்.