தமிழ் திறனறித் தோ்வு: மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்

Published on

தமிழ் திறனறித் தோ்வில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 204 மாணவா்கள் தோ்ச்சிபெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவா்களுக்கான தமிழ் திறனறித் தோ்வு கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்றது. இதில், அரசு பள்ளி மாணவா்கள் 750 பேரும், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 750 பேரும் என மொத்தம் 1,500 போ் தோ்வுசெய்யப்படுவா். இந்தத் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இந்தக் கல்வியாண்டில் இத்தோ்வை 2,70,508 மாணவா்கள் எழுதினா். சேலம் மாவட்டத்தில் 12,280 மாணவ, மாணவியா் எழுதினா். இதில், மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட 1,500 பேரில், சேலம் மாவட்டத்தில் 204 மாணவா்கள் தோ்ச்சிபெற்றுள்ளனா்.

அதில், அரசுப் பள்ளி மாணவா்கள் 133 பேரும், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 71 பேரும் தோ்வாகியுள்ளனா். இதன்மூலம் சேலம் மாவட்டம் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com