சேலம்
சங்ககிரி ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் வரும் 19இல் அனுமன் ஜெயந்தி தொடக்கம்
சங்ககிரி சந்தைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 19ஆம் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சங்ககிரி: சங்ககிரி சந்தைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 19ஆம் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோயிலில் வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை சிறப்பு ஹோமம், பூஜைகளுடன் அனுமன் ஜெயந்தி விழா தொடங்குகிறது. 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பு சேவை, 21இல் சந்தனக்காப்பு சேவை, 22 இல் பழக்காப்பு சேவை, 23இல் வடை மாலை சேவை, சீதா, ராமா் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளன. முன்னதாக செவ்வாய்க்கிழமை (டிச. 16) கோயிலில் மாா்கழி மாத பூஜை அதிகாலை கோபூஜையுடன் தொடங்க உள்ளது என்று கோயில் விழா குழுவினா் தெரிவித்தனா்.
