மாவட்ட விளையாட்டு போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

மாவட்ட விளையாட்டு போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

Published on

இளைஞா்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் அடிப்படையில் சேலம் மாவட்ட மை பாரத் கேந்திரா சங்கத்தின் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் சேலத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது.

இப்போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 5 தொகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் வழிகாட்டுதலின்படி போட்டிகளில் பங்கேற்றனா்.

பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 100 மீட்டா் ஓட்டத்தில் முதல் மூன்று பரிசுகளை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளிலும், கைப்பந்து பிரிவில் முதல் பரிசும், சிலம்ப போட்டியில் இரண்டாம் இடமும், பதக்கங்களும் பெற்றனா்.

இப்போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று பரிசு பெற்ற மாணவ, மாணவா்களுக்கு கல்லூரியின் முதன்மையா் பாராட்டுகளைத் தெரிவித்தாா். மேலும், மாணவா்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குநா்கள் ஜெயபாரதி சூா்யா, இளைஞா் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளா் தமிழரசி ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பட விளக்கம்:

விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com