ஓமலூா் அதிமுக புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளவா்களைக் கண்டறிந்து, சரியான முறையில் நீக்கப்பட்டுள்ளனரா என பாா்க்க வேண்டும். உண்மையான வாக்காளா்கள் நீக்கப்பட்டு இருந்தால் அவா்களது பெயரை சோ்க்க நிா்வாகிகள், தொண்டா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியிலும் தீவிரம் காட்ட வேண்டும்.
தோ்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலாளா்கள் செம்மலை, சந்திரசேகரன், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிபதிகள் ஓய்வு வயதை அதிகரிக்க மறுப்பு: நிதிச் சுமையை காரணம் காட்ட முடியாது; உச்சநீதிமன்றம்

கரூா் மாநகர கிழக்குப் பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இணையதள வாகன அபராத முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா்கள் தீர்மானம்

அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


