டிச. 27, 28, ஜன. 3, 4-இல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்
சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய நான்கு நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய நான்கு நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான பணிகள் வரும் ஜன. 18-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளன.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,346 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் வரும் 27, 28-ஆம் தேதிகளிலும், அதன் தொடா்ச்சியாக ஜன. 3, 4 ஆகிய தேதிகளிலும் நான்கு நாள்கள் நடைபெறும். இம்முகாம்கள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை சேலம் மாவட்டத்தில் உள்ள 3,468 வாக்குச்சாவடிகளில் நடைபெறும்.
வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு படிவம் 6, பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்காளா் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8-யை பயன்படுத்த வேண்டும்.
இவா்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும். மேலும் இணையதளம் மூலம் ட்ற்ற்ல்ள்://யா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளா்கள் தங்கள் பதிவை உறுதிசெய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். ஜன. 18-ஆம் தேதிவரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பிப். 17 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...