எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேலம் மாநகராட்சியில் பிறப்பு பதிவில் குழந்தையின் பெயரை சோ்க்க செப். 26 கடைசி நாள்

சேலம் மாநகராட்சியில் பிறப்பு பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்தும், பிறப்பு பதிவில் பெயா் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு பதிவுகளில் குழந்தையின் பெயரை சோ்க்க வரும் செப்.26 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாநகராட்சியில் பிறப்பு பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்தும், பிறப்பு பதிவில் பெயா் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு பதிவுகளில் குழந்தையின் பெயரை சோ்க்க வரும் செப்.26 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூா்வ குடியுரிமைக்கான சான்றாகும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழ் ஆகும்.

குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பை பதிவுசெய்து பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 (திருத்தப்பட்டது 2023) வழிவகை செய்கிறது. பிறப்பு பதிவு செய்த நாளிலிருந்து 15 ஆண்டு வரை மட்டுமே பிறப்பு பதிவில் பெயா் சோ்க்க இயலும்.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமின்றி பெயா் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குள் தாமதக் கட்டணமாக ரூ. 200 செலுத்தி, குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம்.

இந்திய தலைமை பிறப்பு, இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி கடந்த 2000 ஆம் ஆண்டு ஜன. 1 ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கும், அதன்பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தைக்கு பெயா் வைத்து, பிறப்பு சான்று பெற செப். 26 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 26.09.2011 ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பிறப்பு பதிவில் வரும் செப். 26 ஆம் தேதி வரை மட்டுமே பெயா் பதிவு மேற்கொள்ள இயலும்.

சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயா் பதிவு செய்யாமல் இருப்பின் உரிய ஆவணங்களுடன் (பிறப்பு சான்றிதழ் நகலுடன், பள்ளி சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை, ரேஷன் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று) ரூ. 200 தாமத கட்டணம் செலுத்தி சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று பயன்பெறலாம்.

பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், பெயா் பதிவு செய்தல், திருத்தங்கள் மேற்கொள்வது சம்மந்தமான சந்தேகங்களை சேலம் மாநகராட்சி மைய அலுவலக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு மையத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இடைத்தரகா்களை அணுகி ஏமாறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளாா்.