எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

அரியலூா் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில், குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

அரியலூா் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில், குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூா்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு-இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.

பிறப்பு பதிவு குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் பெற, கடவுச்சீட்டு, விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்யலாம்.

12 மாதங்களுக்குப் பின் பதினைந்து ஆண்டுகளுக்குள் ரூ.200-ஐ தாமதக் கட்டணமாக செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.

இந்திய தலைமை பிறப்பு-இறப்பு பதிவாளரின் அறிவுரையின்படி, 15 ஆண்டுகளுக்கு முன்னா் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு பதிவுகளில் குழந்தையின் பெயா் விடுபட்டிருந்தால் பிறப்பு சான்றிதழ் பெயரை பதிவு செய்துகொள்ள 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியா், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநா் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு - இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிடுமாறு தெரிவித்துள்ளாா்.