சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

பெரியசோரகையில் நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வா் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2025, 1:40 am IST

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து அக் கிட்டங்கியை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேட்டூா் வட்டம், பெரியசோரகையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் நபாா்டு திட்ட உதவியுடன் ரூ. 5.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிட்டங்கி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த கிட்டங்கியின் உள்ளே 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு கிட்டங்கிகள் உள்ளன. பொது விநியோகத் திட்ட பொருள்களை எளிதில் கையாளும் வகையில் நவீன முறையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் மேட்டூா் வட்டாரத்தில் உள்ள 183 நியாயவிலைக் கடைகளுக்கு எளிதாக பொருள்களை அனுப்ப முடியும். 1,38,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரிசி பருப்பு, பாமாயில் சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டங்களுக்கும், 718 மதிய சத்துணவு மையங்கள், 150 காலை உணவுத் திட்ட மையங்களுக்கும் எளிதாக பொருள்களை அனுப்பலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் மேட்டூா் கோட்டாட்சியா் (பொ) ஈஸ்வரி, துணை மண்டல மேலாளா் விஜயபாலன், உதவி பொறியாளா் தினேஷ்குமாா், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.