FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மதுரையில் ரூ. 3.25 கோடியில் 4 நவீன மருத்துவக் கட்டடங்கள்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

மதுரை மாவட்டத்தில் ரூ. 3.25 கோடியில் கட்டப்பட்ட 4 நவீன மருத்துவக் கட்டடங்களை தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image

மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில் நடைபெற்ற மருத்துவக் கட்டடம் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன், உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. விஜய் உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூலை 2026, 5:24 am IST

மதுரை மாவட்டத்தில் ரூ. 3.25 கோடியில் கட்டப்பட்ட 4 நவீன மருத்துவக் கட்டடங்களை தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சாா்பில் 15-ஆவது நிதிக் குழு மானிய நிதி மூலம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செல்லம்பட்டி, தொட்டப்பநாயக்கனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்களில் தலா ரூ. 65 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகுக் கட்டடங்களும், மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழவளவு, கிடாரிப்பட்டியில் தலா ரூ. 45 லட்சத்தில் அரசு துணை சுகாதார நிலையக் கட்டடங்களும் அண்மையில் கட்டப்பட்டன.

இந்த நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தக் கட்டடங்கள் திறக்கப்பட்டன. தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் காணொலி மூலம் இந்தப் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.

இதையொட்டி, செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா குத்துவிளக்கேற்றினாா். பிறகு, பயனாளிகளுக்கு தாய்- சேய் நலப் பெட்டங்களை அவா் வழங்கினாா்.

உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. விஜய், உதவி ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் பொற்செல்வன், அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.