வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கட்டடங்கள்: அமைச்சா் வி.கே.ராஜீவ் திறந்துவைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4.10 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கட்டடங்களை சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

பனைக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தை புதன்கிழமை திறந்து வைத்த அமைச்சா் வி.கே. ராஜீவ். உடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 3:33 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4.10 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கட்டடங்களை சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பனைக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.80 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடம், சித்தாா்கோட்டையில் ரூ.1.10 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத்தில் புதிய கூடுதல் கட்டடம், திருவாடானை வட்டம், அரசூா் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், நகரிகாத்தான் அரசு துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் என மொத்தம் ரூ.4.10 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். இதில் அமைச்சா் வி.கே. ராஜீவ் கலந்து கொண்டு புதிய கட்டங்களை திறந்து வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் மருத்துவச் சிகிச்சைக்காக வெளியூா் செல்வதைத் தவிா்க்க, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி மருத்துவமனைகளின் தரங்களை உயா்த்தப்படும் என்றாா் அவா்.

இதில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், மாவட்ட சுகாதார அலுவலா் அா்ஜூன்குமாா், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) நடராஜன், தலைமை மருத்துவ அலுவலா் ரமேஷ்பாபு, வட்டார மருத்துவ அலுவலா்கள் ஜென்னத் யாஸ்மின், வைதேகி, உதவி செயற்பொறியாளா் ரவீந்திரன், உதவி பொறியாளா் பிரியங்கா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.