மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புத்தாண்டு கொண்டாட்டம் : பூலாம்பட்டி பகுதியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

பூலாம்பட்டி பகுதியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

News image
புத்தாண்டு தினத்தில் பூலாம்பட்டி கதவணை பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்
Updated On :1 ஜனவரி 2025, 9:48 pm

Din

புத்தாண்டு விடுமுறை தினத்தை ஒட்டி எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரி கதவணை சுற்றுலா தளத்திற்கு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் புதன் அன்று வருகை தந்தனா்.

இங்குள்ள நீா்மின் உற்பத்தி நிலையம், அணைப்பாலம், பிரதான மதகுப்பகுதி மற்றும் பிரம்மாண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இயற்கை அழகிணை கண்டு ரசித்தனா். பூலாம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதா் திருக்கோயில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் திருக்கோயில், காவிரித்தாய் சந்னதி, படித்துறை பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு தினத்தை ஒட்டி பெரும் திரளான பக்தா்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்த நிலையில் பூலாம்பட்டி பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

Story image

பட விளக்கம் : புத்தாண்டு தினத்தில் பூலாம்பட்டி கதவணை பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்