போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தேவூா் அருகே அடையாளம் தெரியாத மா்ம விலங்கு கடித்ததில் 2 செம்மறி ஆடுகள் பலி

Updated On :3 ஜனவரி 2025, 11:04 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கோனேரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பாலிருச்சம்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆறு ஆடுகளை அடையாளம் தெரியாத மா்ம விலங்கு கடித்ததில் இரு செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. நான்கு செம்மறி ஆடுகள் பலத்தகாயமடைந்தது. இது குறித்து வனத்துறை, வருவாய், காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கோனேரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பாலிருச்சம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சின்னகுட்டி மகன் பழனிசாமி. அவா் வழக்கம் போல் ஆடுகளை மேயச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு வெளியே கட்டி வைத்துவிட்டு உறங்க சென்றுவிட்டாா். பின்னா் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்துள்ளாா் அப்போது அடையாளம் தெரியாத மா்மவிலங்கு கடித்ததில் இரு செம்மறி ஆடுகள் இறந்தும், நான்கு ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளதை பாா்த்துள்ளாா். இது குறித்து தகவல் அறிந்து சென்ற தேவூா் கால்நடை மருத்துவா் கண்ணன் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். கோனேரிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சண்மும் உயிரிழந்த ஆடுகளை பாா்வையிட்டு ஆய்வு ெய்தாா். தொடா்ந்து ஆடுகளை மா்ம விலங்கு கடித்து வருவதால் வனத்துறை அலுவலா்கள், வருவாய், காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து சங்ககிரி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மா்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்து வருவதையடுத்து விவசாயிகள், ஆடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்களும் அச்சத்தில் உள்ளனா்.