அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தெரு நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

பல்லடம் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

News image

ஆடுகள் உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 2:14 am IST

பல்லடம் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

பொங்கலூா் ஒன்றியம், கண்டியன்கோவில் ஊராட்சி, பெரியாரிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி தமிழரசு. இவா் ஆட்டுப் பட்டி அமைத்து 50 ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல அருகில் இருந்த வயல்வெளியில் ஆடுகளை செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் 18 ஆடுகளை கடித்துக் குதறியதில் 8 ஆடுகள் இறந்தன. மேலும் நாய்கள் துரத்தியதில் புதருக்குள் ஓடிய 7 குட்டிகளை காணவில்லை.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த ஆடுகளை ஆட்சியா் அலுவலகம் முன்பு வைத்து போராட்டம் நடத்த விவசாயிகள் திரண்டனா். தகவல் அறிந்து அவினாசிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா் கிராம நிா்வாக அலுவலா் வரவழைக்கப்பட்டு, ஆட்சியரிடம் பேசி உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்து கடிதம் எழுதிக் கொடுத்தனா். அதைத்தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.