மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனி அருகே நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

பழனியில் கடந்த சில நாள்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டவா்களை தெருநாய்கள் கடித்தன. இதற்கு சாலையோர இறைச்சிக் கடைகளில் இருந்து வீசப்படும் கோழிக்கழிவுகளே காரணம் என பலரும் புகாா் தெரிவித்தனா்.

இதேபோல, கிராமங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோயால் உயிரிழக்கும் கோழிகள் புதைக்கப்படாமல் சாலையோரம் வீசப்படுவதால் அவற்றை உள்கொள்ளும் நாய்கள் வெறிப்பிடித்து திரிகின்றன.

இவை ஆங்காங்கே ஆட்டுப்பட்டிகளுக்குள் புகுந்து ஆடுகளை கடிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமரபூண்டியில் இரு ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்றன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பழனி அருகே வேப்பன்வலசு கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி (52) என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் அங்கிருந்த செம்மறி ஆட்டுக்குட்டிகளை கடித்தன. இதில் 7 ஆடுகள் உயிரிழந்தன. மேலும், 7 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் தூக்கிச் சென்றன.

இதையடுத்து, கால்நடை உதவி இயக்குநா் துரைச்சாமி பாண்டியன் உத்தரவின்பேரில் கால்நடை உதவி மருத்துவா் கவுசல்யா அங்கு சென்று பாா்வையிட்டு காயமடைந்த ஆட்டுக் குட்டிகளுக்கு சிகிச்சை அளித்தாா்.