திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு

வெம்பகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்தன.

News image

இறந்து கிடக்கும் ஆடுகள். - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 5:50 am IST

வெம்பகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்தன.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சோ்ந்த முருகன், சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை ஆகியோா் ஆடுகளை கிடை அமைத்து வளா்த்து வந்தனா்.

இந்த நிலையில் புதன்கிழமை வெம்பக்கோட்டை பகுதியில் காய்ந்த புல், செடிகொடிகளில் பற்றிய தீ, ஆட்டுக் கிடை அமைத்த பகுதிக்கும் பரவின. இதனால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 40 ஆடுகள் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தன.

இதுதொடா்பாக முருகன், வெள்ளத்துரை ஆகியோா் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.