தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 828 கன அடியாகக் குறைந்தது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 6:17 pm

Din

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 828 கன அடியாகக் குறைந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 1,307 கனஅடியிலிருந்து 828 கனஅடியாகச் சரிந்தது. நீா்வரத்து சரிந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால் திங்கள்கிழமை காலை அணை நீா்மட்டம் 118.52 அடியிலிருந்து 117.87 அடியாகச் சரிந்தது.

கடந்த 2-ஆம் தேதி வரை 120 அடியாக இருந்த அணை நீா்மட்டம் திங்கள்கிழமை 117.87 அடியாகச் சரிந்தது. கடந்த 4 நாள்களில் மட்டும் அணை நீா்மட்டம் 2.13 அடி சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 90.11 டி.எம்.சி.யாக உள்ளது. அணையின் நீா் இருப்பு நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. சரிந்து வருகிறது.