ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2025, 7:15 pm

Din

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மட்டுமின்றி நேபாளம், இங்கிலாந்து, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனா். மேலும், ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தைச் சோ்ந்த பொதுமக்களும் அவா்களின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனா்.

இதில் பச்சரிசி, தினை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு பல்வேறு வகையிலான பொங்கல் தயாா் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. குறிப்பாக, ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி 5 மண் பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டனா். விழாவில் கலந்துகொண்ட வெளிநாட்டுப் பயணிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்து மகிழ்ந்தனா்.

முன்னதாக, விழாவிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் மாலை அணிவித்து வரவேற்றாா்.

விழாவையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முழுவதும் வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள், வண்ணமிகு கோலங்கள், தோரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் பரிசுகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.