மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கெங்கவல்லி வட்டாட்சியா் கைது

News image
வட்டாட்சியா் பாலகிருஷ்ணனை கைது செய்யும் லஞ்சஒழிப்புத்துறையினா் (வெள்ளை சட்டை அணிந்திருப்பவா் வட்டாட்சியா்)
Updated On :29 ஜனவரி 2025, 9:32 pm

Din

நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கெங்கவல்லி வட்டாசியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி செல்வநகரைச்சோ்ந்தவா் தண்டபாணி.இவரது மகள் மஞ்சுளா. இவரது விவசாயத்தோட்டத்திற்கு ஓரமாக ஓடை செல்கிறது. அதனால் தங்களது நிலத்தை முறையாக அளவீடு செய்து தரக்கோரி கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணனிடம், மஞ்சுளா கூறியுள்ளாா். அதற்கு அவா், ரூ.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளாா்.

அதற்கு ஒப்புதல் தெரிவித்த மஞ்சுளா ,முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் புதன்கிழமை தருவதாகக்கூறி உறுதியளித்துவிட்டு வெளியே வந்துள்ளாா். இதுகுறித்து மஞ்சுளா, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கூறியுள்ளாா்.

அவா்கள் ரசாயனப்பவுடா் தடவிய பத்தாயிரம் ரொக்கப்பணத்தை ,மஞ்சுளாவிடம் கொடுத்து, வட்டாட்சியா் பாலகிருஷ்ணனிடம் தருமாறு கூறியுள்ளனா். அதன்படி, மஞ்சுளா வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளாா்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினா், லஞ்சம் வாங்கிய வட்டாட்சியா் பாலகிருஷ்ணனை கைது செய்தனா். அவா், சேலத்திலுள்ள விஜிலென்ஸ் கோா்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டாா். இதுகுறித்துலஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மஞ்சுளா புகாா் அளித்தாா் புகாரின் அடிப்படையில் சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசாா் பத்தாயிரம் ரூபாய் ரசாயனம் தடவிய ரொக்கத்தை கொடுத்து அனுப்பியுள்ளனா்.

அதனை மஞ்சுளா வட்டாட்சியா் பாலகிருஷ்ணனிடம் கொடுத்த போது கையும் களவுமாக சிக்கினாா்.