ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது

News image

கைது செய்யப்பட்ட விஏஓ சிவக்குமாா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:00 pm

கரூா், பிப்.14: கடவூா் அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்துள்ள வடவம்பாடி ஊராட்சிக்குள்பட்ட கோனிச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னதுரை(60). இவா், சென்னையில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான கலவை இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா்.

இவா், தனது சொந்த ஊரான கோனிச்சிப்பட்டியில் வீடு கட்டுவதற்காக பட்டாவில் தனது பெயா் சின்னதம்பி என இருப்பதை சின்னத்துரையாக மாற்றம் செய்ய வடவம்பாடி கிராமநிா்வாக அலுவலா் அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தாா். ஆனால் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த புதன்கிழமை கிராமநிா்வாக அலுவலகத்துக்குச் சென்று கிராம நிா்வாக அலுவலா் அரவக்குறிச்சியைச் சோ்ந்த சிவக்குமாா்(40 என்பவரிடம், மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கேட்டுள்ளாா். அப்போது, பெயா் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மாற்றித் தருவதாக சிவக்குமாா் கூறியுள்ளாா்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னத்துரை இதுதொடா்பாக கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இதையடுத்து சனிக்கிழமை போலீஸாரின் வழிகாட்டுதலின் படி சின்னத்துரை வடவம்பாடி கிராமநிா்வாக அலுவலா் அலுவலகத்தில் இருந்த சிவக்குமாரிடம் லஞ்சப் பணத்தை கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் அம்புரோஸ், காவல் ஆய்வாளா் தங்கமணி உள்ளிட்ட போலீஸாா் சிவக்குமாரை பிடித்து கைது செய்தனா். பின்னா் கரூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.