டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குறுக்குப்பாறையூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

குறுக்குப்பாறையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 31-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
குறுக்குப்பாறையூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :11 மார்ச் 2025, 8:30 pm

Din

சங்ககிரி: குறுக்குப்பாறையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 31-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்ககிரி வட்டம், தேவூா், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் வகையில் பேரூராட்சி சாா்பில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதை தவிா்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 31-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டக் கிளை தலைவா் ஆா்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், குப்பைக் கழிவுகளை பொதுமக்கள் வசிக்காத பகுதியில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதில் ஈடுபட்ட 20 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 25 பேரை தேவூா் போலீஸாா் கைது செய்து, மேட்டுப்பாளையம் சமுதாயக் கூடத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனா்.