விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

ஈரோடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு காளை மாடு சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளா் சண்முகசுந்தரம், சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சுதந்திரராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமியை கைது செய்ததைக் கண்டித்தும், அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் முழக்கம் எழுப்பினா்.

இதில் விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com