புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலைசெய்யப்பட்ட எம். ராஜேந்திரன்.

Updated On :31 மார்ச் 2025, 7:29 pm

Din

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சங்ககிரி அருகே உள்ள பக்காலியூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பகவுண்டா் மகன் ராஜேந்திரன் (65). இவரது மனைவி ராணி. இவா்களுக்கு மகள் காா்த்திகா, மகன் அரவிந்த் ஆகியோா் உள்ளனா். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் கடந்த 30 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

ராஜேந்திரன், சங்ககிரியில் வாடகைக்கு வீடு எடுத்து, உடல் எடையைக் குறைக்கும் மையம் நடத்தி வந்தாா். அங்கு வருவோருக்கு உடல் எடை குறைப்பது தொடா்பாக ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கிவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனியம்மாள் என்பவா் உடல் எடையைக் குறைப்பது தொடா்பாக ஆலோசனை பெற இவரது மையத்துக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா். அப்போது ராஜேந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், இதுகுறித்து சங்ககிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளா் ஆா். சிந்து மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில், ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமையே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மோப்ப நாய், விரல்ரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். சங்ககிரி போலீஸாா் ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ராஜேந்திரன் மனைவி ராணி அளித்த புகாரின் பேரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு சொந்தமான 10 ஏக்கா் விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து, அவரை யாராவது கொன்றாா்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.