பிகாரிலிருந்து சேலம் வழியாக எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்

Published on

பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு பிகாா் மாநிலம், பரூனியில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு வரும் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகைக் காலத்தையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால் பிகாா் மாநிலம், பரூனியில் இருந்து எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வரும் 11, 12 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு பரூனியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக 14, 15 ஆம் தேதிகளில் காலை 6 மணிக்கு கேரள மாநிலம் எா்ணாகுளம் ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com