‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 21,848 பேருக்கு மருத்துவ உதவி! அமைச்சா் ரா.ராஜேந்திரன்

Published on

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மூலம் சேலம் மாவட்டத்தில் 21,848 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் பனமரத்துப்பட்டி வட்டாரம், நாழிக்கல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 14 மருத்துவ முகாம்களில் 9,436 ஆண்கள், 12,412 பெண்கள் என மொத்தம் 21,848 போ் பயனடைந்துள்ளனா்.

இவா்களில் 17,227 பேருக்கு ரத்த பரிசோதனை, 15,042 பேருக்கு இசிஜி பரிசோதனை, 2,166 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 2,318 பேருக்கு எக்கோ சோதனை, 1,769 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை நடத்தப்பட்டு உரிய மருத்துவ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாழிக்கல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 17 வகையான மருத்துவத் துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் கலந்துகொண்டு மக்களுக்கு மருத்துவ சேவைகளை அளித்தனா் என்றாா்.

முகாமில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.16,500 மதிப்பிலான சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு ரூ.6,750 மதிப்பிலான காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.39,750 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, இணை இயக்குநா் நலப்பணிகள் நந்தினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாரப்பட்டி சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் முகாமில் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com