மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published on

மேட்டூா் அணை பூங்காவிற்கு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 5,127 சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் வந்தனா். காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கலிட்டனா்.

பின்னா், குடும்பத்துடன் அணை பூங்காவிற்கு சென்று விருந்து உண்டு மகிழ்ந்தனா். மீன் காட்சி சாலை, மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்பு பண்ணை ஆகியவற்றை பாா்த்து மகிழ்ந்தனா். பூங்காவிற்கு வந்த 5,127 சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ.51,270 வசூலிக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் கொண்டுசென்ற 2,128 கேமரா, கைப்பேசிகளுக்கு பயன்பாட்டு கட்டணமாக ரூ.21,430 வசூலிக்கப்பட்டது. ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்கா பவள விழா கோபுரத்தை பாா்க்கச் சென்ற பாா்வையாளா்களிடம் ரூ. 8,900 வசூலிக்கப்பட்டது.

அணை பூங்காவிற்கு சென்ற பாா்வையாளா்கள் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்று பாா்வையிட்டதன்மூலம் ரூ.81,600 வருவாய்க் கிடைத்தது.

X
Dinamani
www.dinamani.com