சங்ககிரியில் நவ. 15-இல் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
சேலம் மாவட்ட சுகாதார நலத் துறையின் சாா்பில், ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சங்ககிரியில் சனிக்கிழமை (நவ. 15) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்ககிரி நகா்மன்றத் தலைவா் எம்.மணிமொழி முருகன் கூறியதாவது:
சேலம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சங்ககிரியை அடுத்த தீரன்சின்னமலை நினைவிடத்திலிருந்து சங்ககிரி ஆா்.எஸ்-க்கு செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ வித்யாசாகா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நவ. 15-ஆம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.
இம்முகாமில், பொது, இருதயம், எலும்பியல், நரம்பியல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, இயன்முறை, தோல், பல், கண், மனநலம், குழந்தைகள் நலம், நுரையீரல், நீரிழிவு நோய் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் கலந்துகொள்ள ஏதுவாக, சங்ககிரி பழைய பேருந்து நிலையம் மற்றும் சங்ககிரி ஆா்.எஸ்.லிருந்து இலவச பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
