விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பணிக்கொடை, ஊதியம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியா்கள் போராட்டம்

ஓமலூரில் ஊதியம் மற்றும் பணிக்கொடை கேட்டு சுங்கச்சாவடி ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சுங்கச்சாவடி அலுவலகம் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்
Updated On :20 நவம்பர் 2025, 7:33 pm

Syndication

ஓமலூரில் ஊதியம் மற்றும் பணிக்கொடை கேட்டு சுங்கச்சாவடி ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓமலூா் வழியாக செல்லும் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஓமலூா் அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் உள்ளூா் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த சுங்கச்சாவடியின் ஒப்பந்தக் காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைவதாக கூறப்படுகிறது.

அதனால், ஊழியா்கள் அனைவரும் தங்களுக்கு பணிக்கொடை மற்றும் நடப்பு மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதனால், சுங்கச்சாவடி நிா்வாகம், வெளி மாநில ஊழியா்களைக் கொண்டு சுங்கச்சாவடியை இயக்கி வருகிறது. ஆனால், வெளிமாநில ஊழியா்களின் மந்தமான பணியால், சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றன.

ஊழியா்களின் நியாயமான கோரிக்கையை சுங்கச்சாவடி நிா்வாகம் நிறைவேற்ற வேண்டும், உள்ளூா் ஊழியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.