தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா ஆதரவு தெரிவித்தாா்.
காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளருக்கு நிகரான ஊதியமும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளா் நிலையினான ஊதியம் என காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளா் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா மற்றும் மேற்கு மாவட்ட இளைஞா் அணி தலைவா் புங்கத்தூா் தேவா, மாவட்ட அம்மா பேரவை செயலாளா் கே.பி.எம்.எழிலரசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ஏ.நேசன், பூண்டி ஒன்றிய செயலாளா் ராமஞ்சேரி எஸ்.மாதவன் மற்றும் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
தொடர்புடையது

இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள்
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!

ஊதியம் இல்லாமல் பணியாற்றும் அம்மா உணவக ஊழியா்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை ஊழியா்கள் 380 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


