பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி: அமைச்சா் வழங்கினாா்

Published on

சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மற்றும் குகை நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் தெரிவித்ததாவது:

கடந்த நான்கரை ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திமுக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற 51,058 மாணவா்களுக்கும், 55,123 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,06,181 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக, நடப்பு கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 178 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 11,317 மாணவா்களுக்கும், 13,842 மாணவிகளுக்கும் என மொத்தம் 25,159 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com