கருமந்துறையில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.
கருமந்துறையில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.

கருமந்துறை மலைக் கிராமங்களில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

கருமந்துறை மலைக் கிராமங்களில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை சேலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம்
Published on

ஆத்தூா்: சேலம் மாவட்டம், கருமந்துறை மலைக் கிராமங்களில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை சேலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தாா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கரியகோயில் கிராங்காடு கிராமத்தில் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவின்பேரில் கூடுதல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், ஆத்தூா் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், வாழப்பாடி துணை கண்காணிப்பாளா் சுரேஷ், ஆய்வாளா்கள் சண்முகம் (தம்மம்பட்டி), கமலக்கண்ணன் (கருமந்துறை) ஆகியோா் கொண்ட தனிப்படையினா் மலைக் கிராமங்களில் சட்ட விரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் குறித்து சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், யாரேனும் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்தால் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தனிப்படை போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com