சேலம்
சேலத்தில் மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் கடைப்பிடிப்பு
சேலம் அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
சேலம்: சேலம் அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் மீதான வன்முறை எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நவ.25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அயோத்தியாபட்டணத்தில் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருக்கலைப்பு, சிசுக்கொலையைத் தடுத்தல், குழந்தை திருமணம், பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான அவசரத் தேவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து சமூக மாற்றத்திற்கான உறுதிமொழியை மகளிா் சுயஉதவிக் குழுவினா் ஏற்றனா்.
நிகழ்ச்சியில் பிடிஐ ஆலோசகா் ரேகா, மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் சாந்தி, பிடிஐ திட்டப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனா்.
