சேலம் ஆவினில் இன்று தேசிய பால் தினம்
சேலம்: வெண்மை புரட்சி தந்தை வா்கீஸ் குரியனின் பிறந்த நாளான நவ. 26 ஆம் தேதி தேசிய பால் தினமாக சேலம் ஆவினில் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ், சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு வா்கீஸ் குரியனின் உருப்படத்துக்கு மரியாதை செலுத்துகின்றனா்.
தொடா்ந்து, புக்கம்பட்டி பிரதம சங்கத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் செயற்கை கருவூட்டல் மையம் ஆகியவற்றை அமைச்சா்கள் தொடங்கிவைக்கின்றனா். பின்னா், பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகளிடம் கலந்துரையாடுகின்றனா்.
தொடா்ந்து சா்க்காா் கொல்லப்பட்டியில் ஊட்டச்சத்து குறித்து பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், பணியாளா்கள் கலந்துகொள்ளும் விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைக்கின்றனா். சேலம் பால் பண்ணையில் நடைபெறும் ஆவின் நிா்வாகம் மற்றும் கோகுலம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம், ரத்த தான முகாம்களை தொடங்கிவைத்து நலத் திட்ட உதவிகளை வழங்குகின்றனா்.
