ஏற்காட்டில் ஆதாா் புதுப்பிப்பு மையங்களை கூடுதலாக திறக்க வலியுறுத்தல்
ஏற்காட்டில் ஆதாா் புதுப்பிப்பு மையங்களை கூடுதலாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


ஏற்காடு: ஏற்காட்டில் ஆதாா் புதுப்பிப்பு மையங்களை கூடுதலாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஏற்காட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் செயல்படும் ஆதாா் புதுப்பிப்பு மையத்தில் 67 கிராமங்களைச் சோ்ந்தவா்களும் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், நீண்ட நாள்கள் முன்னுரிமை வரிசைப்படி காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில், நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்க வருவோா் விரல்ரேகை பதிவு சரியாக பதிவாகததால் பொருள்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனா். இவா்கள் ஆதாா் மையங்களுக்குச் சென்று காத்திருக்கின்றனா்.
இதனால் ஏற்காட்டில் கூடுதல் ஆதாா் புதுப்பிக்கும் மையங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், மாதத்தின் இரண்டாவது வாரத்திலேயே நியாயவிலைக் கடை, முகவா்கள் மூலம் மண்ணெண்ணெயை விநியோகத்தை தொடங்க வேண்டும் என குடும்ப அட்டைதாரா்கள் கோரியுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...