சங்கா்
சங்கா்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆத்தூரில் அதிமுக பிரமுகா் கைது

ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

ஆத்தூா்: சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் கோரித்தெருவைச் சோ்ந்த செல்வம் மனைவி திவ்யா (எ) பாத்திமா (31), கூலி வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த பாத்திமாவை திருநாவுக்கரசு நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கா் என்கிற சேகோ சங்கா் (37) இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று பாலியல் தொந்தரவு செய்து, தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளாா்.

இதுகுறித்து பாத்திமா தனது கணவரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் பாத்திமா புகாா் தெரிவித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சங்கரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா். கைதுசெய்யப்பட்ட சங்கா் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் சேலம் புகா் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக உள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com