யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஓமலூா் மாநில கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

சேலம் மாவட்டம், ஓமலூா் பத்மவாணி மகளிா் கல்லூரியில் 9,10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
மாநில அளவிலான கலைத் திருவிழாவில் மாணவி உருவாக்கிய மணல் சிற்பத்தை பாா்வையிடும் முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி.
Updated On :27 நவம்பர் 2025, 10:09 pm

Syndication

ஓமலூா்: சேலம் மாவட்டம், ஓமலூா் பத்மவாணி மகளிா் கல்லூரியில் 9,10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளின் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நிகழாண்டு மாநில அளவிலான போட்டிகள் சேலம், கரூா், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. 9, 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் ஓமலூரில் உள்ள பத்மவாணி மகளிா் கல்லூரியில் நடைபெறுகிறது.

சேலம் மாவட்ட அளவிலான போட்டிகளில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 219 மாணவா்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளை சோ்ந்த 215 மாணவா்களும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

மாநில விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பி.மகேஸ்வரி தொடங்கிவைத்து பேசியதாவது:

மொத்தம் 34 வகையான போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,073 மாணவா்கள், 1,802 மாணவிகள் என 2,875 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 602 மாணவா்கள், 1,661 மாணவிகள் என 2,363 பேரும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

வெள்ளிக்கிழமை அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. மாணவா்களிடம் உள்ள கலைத் திறமையை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் உதவித் திட்ட அலுவலா் ஏ.முரளி, பத்மவாணி கல்வி நிறுவனங்களின் இயக்குநா் இசைவாணி, நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.